மன்னார் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையில் அபிவிருத்தி செயற்பாடுகளினை முன்னெடுப்பதற்காகவும்,  எதிர்காலத்தில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்தி சிறந்த முறையில் நடாத்தி செல்வதற்குமான கலந்துரையாடலானது மாவட்ட செயலாளர் க.கணகேஸ்வரன் தலைமையில்  இன்று (08.08) மாவட்ட செயலகத்தின் மருதம் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்டத்தின் விளையாட்டுத்துறையின் பிரதி நிதித்துவம் வழங்கும் வகையில் பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

மேலும் பல்வேறு விளையாட்டுத் துறையினை மேம்படுத்து முகமாக ஒவ்வொரு விளையாட்டுத் துறைக்குமான பொறுப்பான குழு உறுப்பினர்கள் இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here