யாழ்ப்பாணத்தில் சுமார் 42 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாவுடன் நேற்று (12) இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட கஞ்சா போதைப்பொருள் அரியாலை பகுதியில் உள்ள தென்னந்தோப்பு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால்  கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அரியாலை மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து சுமார் 156 கிலோகிராம்  கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றின் பெறுமதி சுமார் 42 மில்லியன் ரூபாய் எனவும்  தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here