கொட்டியாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (12.08) காலை இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்மல்யாய, கொட்டியாகலை பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நபர் ஒருவருடன் ஏற்பட்ட தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொட்டியாகல பிரதேசத்தில் வசிக்கும் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எதிமலே பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








