2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக மேலும் ஐந்து வேட்பாளர்கள் நேற்றையதினம் டெபாசிட் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இதுவரை மொத்தம் 32 வேட்பாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
இதில் வாக்காளர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட 15 சுயேச்சை வேட்பாளர்களும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 16 வேட்பாளர்களும், மற்ற அரசியல் கட்சிகளைச் சேர்ந்த ஒரு வேட்பாளரும் அடங்குவர்.
முன்னாள் விளையாட்டு அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் ஆகியோரும், ஐக்கிய ஜனநாயக கூட்டணியின் அபுபக்கர் மொஹமட் இன்பாஸ் மற்றும் ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் பிரசங்க சுரஞ்சீவ அனோஜ் டி சில்வா ஆகியோரும் இன்று பிணைப்பணத்தை செலுத்தியுள்ளனர்.








