கொழும்பு பொரளை பேராயர் இல்லத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை இன்று சனிக்கிழமை (17.08) நண்பகல் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அநுரகுமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.

நாட்டில் நிலைமை, அரசியல் நிலவரம் தொடர்பில் அருட்தந்தையர்களுடன் கலந்துரையாடிய அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தோ்தலில் வெற்றி பெறுவதற்கான ஆசியை அவர்களிடம் பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் விஜித ஹேரத் இணைந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here