சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் ஒக்டோபர் 10ஆம் திகதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

டி ஜெ ஞானவேல் இயக்கத்டதில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.

மேலும், இப்படத்தில் அமிதாப்பச்சன், ஃபஹத் ஃபாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்துள்ளதுடன், அனிருத் இசை அமைத்துள்ளார்.

இதேவேளை, சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ படமும் அதேநாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

‘கங்குவா’ திரைப்படத்டதில் படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர்.

யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார்.

தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here