2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உச்ச சபை தீர்ப்பளித்த போதிலும், தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் வருந்தப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடுவது மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இருந்தாலும், வாழ்வுரிமையை உறுதிப்படுத்துவதற்கும், வாக்களிக்கும் மற்றும் வாழும் உரிமை இரண்டையும் பாதுகாப்பதற்கும் அர்ப்பணிப்புடன் நேரத்தை செலவிட்டதால் தான் வருத்தமடையவில்லை என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மஹரகம வை.எஸ்.சி கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற புதிய மக்கள் முன்னணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here