தற்பொழுது குரங்கம்மை நோய் தான் பெரும் பேசுபொருளாக உள்ளது.
1958ஆம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்ட குரங்குகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதே குரங்கம்மை நோய்.
தற்சமயம் உலக நாடுகளில் இந்த நோய்த் தாக்கம் கண்டறியப்பட்டு வருகின்றது.
இதன் அறிகுறிகளாக தீவிரமான காய்ச்சல், உடல் வலி, கொப்புளங்கள் ஆகியன உள்ளன.
குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவருக்கு சரியாக ஒரு வாரத்தில் அதற்கான அறிகுறிகள் தெரிய வரும்.
தும்மும் போது வெளிவரும் எச்சில், உடலிலுள்ள காயங்களை தொடுவதன் மூலம், குரங்கம்மையால் பாதிக்கப்பட்டிருப்பவரின் கறைபட்ட ஆடைகள், கிருமி தொற்றுக்குள்ளான துணிகள், படுக்கைகள், உடலுறவு, பாதிக்கப்பட்ட விலங்குகள் போன்றவற்றின் மூலமும் இந்நோய் பரவும்.
இந்த நோய் பாதிப்புக்குள்ளானவர்கள் ஏனையோரிடமிருந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
மேலும் குரங்கம்மை நோயினால் 3 முதல் 10 சதவீதம் வரையில் உயிரிழப்புக்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
எனவே இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை நாட வேண்டும்.








