கண்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தையில் மணிக்கூண்டுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடுகண்ணாவையிலிருந்து கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றில் இருந்த வயோதிபர் ஒருவர் குறித்த பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியை கடக்க முற்பட்ட போது அதே பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த வயோதிபரின் சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here