நீதிபதிகளை விமர்சிக்கும் வகையில் அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து கொழும்பு பேராயர் மேதகு கர்தினால் ரஞ்சித் கவலை வெளியிட்டுள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்ட கொழும்பு பேராயர்,

நீதித்துறையின் பூரண சுதந்திரம் அரசியலமைப்பின் மூலக்கல்லாகும் எனவும், அது அரசினால் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டிய ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து நிலைநிறுத்துவது அனைத்து அரசு மற்றும் பிற நிறுவனங்களின் கடமையாகும் என்றும், அது எந்த விதமான தலையீடு அல்லது தேவையற்ற செல்வாக்கின்றி இருப்பதை உறுதி செய்வதாகவும் அவர் கூறினார்.

மக்களின் பாதுகாப்பின் கடைசி கோட்டையைத் தாக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் திருச்சபை கேட்டுக்கொள்கிறது என்று மால்கம் கர்தினால் ரஞ்சித் வலியுறுத்தியுள்ளார்.

தங்களுக்கு பாதகமான சில தீர்ப்புகளை வழங்கிய நீதிபதிகளை விமர்சித்து அரசாங்கத்தின் சமீபத்திய அறிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here