விஜய் தொலைக்காட்சியின் கலக்கப்போவது யாரு? குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர் நடிகர் புகழ்.
கடந்த சில வருடங்களாக திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது அறிமுக இயக்குநர் மகேஸ்வரன்கேசவன் இயக்கும் ‘Four சிக்னல்’ என்ற புதிய திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.
இக் கதை மக்கள் பயன்படுத்தும் எளிய போக்குவரத்தான ஷேர் ஆட்டோவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இத் திரைப்படத்தில் வினோத், விஜய் ஆதிராஜ், காத்து கருப்பு கலை ஆகியோர் நடித்துள்ளனர்.
இத் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.








