எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டாலும் முச்சக்கர வண்டி கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் சுடில் ஜயருக் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 300 ரூபாவாக குறைக்கப்பட்டால் முதல் கிலோமீட்டருக்கு அறவிடப்படும் தொகையை 80 ரூபாவாக குறைக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி கட்டணத்தை குறைப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து தற்போது தொழில்நுட்ப குழுவொன்று செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here