கற்பிட்டி பல்வேறு சேவைகள் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தின் பெற்றோல் விநியோக தாங்கி மூன்று நாட்களுக்கு இன்று (01.09) சீல் வைக்கப்பட்டுள்ளது.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண அலுவலகத்தினால் சீல் வைக்கப்பட்டு சோதனைக்காக எரிபொருள் மாதிரியும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் வினவியபோது, ​​பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடமேற்கு மாகாண செயற்பாட்டு முகாமையாளர் எஸ்.பி.ரத்நாயக்க, பெற்றோலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்படுவதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here