கிழக்கு சீனாவில் நேற்றைய தினம் (03.09) அதிகாலை மாணவர்கள் மற்றம் அவர்களது பெற்றோர்கள் மீது பஸ் மோதியில் 11 பேர் உயிரிழந்துள்ளதோடு, 13 பேர் காயமடைந்துள்ளனர்.
ஷான்டாங்கில் உள்ள தையான் நகரில் உள்ள பாடசாலையின் முன்பு 7 மணிக்கு பஸ்ஸூக்காக மாணவர்கள் காத்துக்கொண்டிருந்த நிலையில் அங்கு வந்த பஸ் ஒன்று மாணவர்கள் மீது மோதியுள்ளது.
இதன்போது, 6 பெற்றோர்கள் மற்றும் 5 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
பஸ் சாரதி கைது செய்யப்பட்டள்ளதோடு, சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான பஸ் மாணவர்களை ஏற்றி செல்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.







