ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.
அக்காலப்பகுதியில் 4 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பான 173 முறைப்பாடுகள் பொலிஸ்திணைக்களத்துக்குகிடைத்துள்ளன. அந்த முறைப்பாடுகளை குற்றவியல் முறைப்பாடுகள் மற்றும் தேர்தல் சட்டமீறல் முறைப்பாடுகள் என வகைப்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.








