தமிழ் பொது வேட்பாளருக்கான பரப்புரை அறிக்கைகள் விநியோகிக்கும் நடவடிக்கைகள்  வடமராட்சி கிழக்கிலும் தீவிரமாக  முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

சங்கு சின்னத்தில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் நேற்று (06.09) பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இதன்போது தமிழ் பொது வேட்பாளருக்கான ஆதரவு மக்களிடையே பெருகிவருவதாக தெரிவித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும் ஜனநாயக போராளிகள் கட்சியை சேர்ந்தவருமான ஆனந்தராசா சுரேஷ்குமார் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு பொது வேட்பாளருக்கு அமோக ஆதரவை வழங்கவேண்டும் எனவும் தமிழ் மக்களை கேட்டுக்கொண்டார்.

இதில் ஜனநாயக போராளிகள், கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், முன்னாள் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர்கள், மணல்காடு கிராம அபிவிருத்தி சங்க தலைவர், தாளையடி கடற்தொழிலாளர் கூட்டுறவு  சங்க செயலாளர் என பலரும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here