முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான உத்திக்க பிரேமரத்ன பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்துக்கு உதவி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மகாநாமவை எதிர்வரும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கமாறு அநுராதபுரம் மேலதிக நீதவான் மனோதி ஹேவாவசம் உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ மகாநாம பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 05 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை (06) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.








