கொட்டாவ மாலபே பகுதியில் 10,000 ரூபா பணம் கேட்டு அதனை தர மறுத்ததால் மூதாட்டியின் கழுத்தை மிதித்து கொலை செய்த சந்தேக நபரை கைதுசெய்து எதிர்வரும் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.
80 வயதுதுடைய மூதாட்டியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர் கொலையுண்ட பெண்ணின் மகளின் கணவருக்குச் சொந்தமான கட்டிடப் பொருட்கள் நிறுவனத்தில் பணிபுரிபவரெனவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.








