தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது, வடக்கு மக்களை அச்சுறுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட தனது கருத்து தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ளார்.
அவர் தன்னை பற்றி கூறிய , விமர்சனத்தை நிராகரித்ததோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (TNA) பேச்சாளர் எம்.பி.எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே சரியான பதிலை வழங்கியுள்ளார் என்று வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஏற்கனவே சரியான பதிலை வழங்கியிருப்பதால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை.
இனவாதத்தைத் தூண்ட முயற்சித்ததற்காக ரணில் தான் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார். தனது கருத்தைப் பாதுகாத்து, குற்றச்சாட்டை மீண்டும் ஜனாதிபதி மீது திருப்பினார்.
எவ்வாறாயினும், சுமந்திரன் இதற்கு முன்னர் திஸாநாயக்கவை பாதுகாத்து, இந்த கருத்துக்கள் இனவாத உள்நோக்கத்துடன் வெளியிடப்படவில்லை என்றும், நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதில் திஸாநாயக்க அர்ப்பணிப்புடன் இருப்பதை தாம் அறிந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.








