கோட் படம் ரிலீஸ் ஆன தினத்திலேயே நடிகை த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நடிகர் சிவகார்த்திகேயன் என அனைவரும் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் வெளியானது.
இதில், சிவகார்த்திகேயன் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
த்ரிஷா மட்ட பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிரபல திரையரங்கில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் அவரது கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைந்து படம் பார்க்க வந்துள்ள நிலையில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








