பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் பித்தப்பைக் கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் அஜித் குமார் என்பவர் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

“இறந்தவர் சரண் மாவட்டத்தின் பூவல்பூர் கிராமத்தைச் சேர்ந்த கோலு என்கிற கிருஷ்ண குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார். குடும்ப உறுப்பினர்களின் தகவலின்படி, கோலு சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவரது குடும்பத்தினர் சரணில் உள்ள தர்மபாகி பஜாரிலுள்ள ஒரு தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு கோலுவின் நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவரை பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவர் செப்டம்பர் 7 அன்று உயிரிழந்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இறந்தவரின் தாத்தா, ​​ அஜித் குமார் யூடியூப்பில் வீடியோவைப் பார்த்து என் பேரனுக்கு அறுவைச் சிகிச்சை செய்வதை நான் நேரில் பார்த்தேன். பித்தப்பை கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்வதாக அவர் எங்களிடம் தெரிவிக்கவும் இல்லை, அனுமதியும் பெறவில்லை.

கோலுவின் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் பாட்னாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே கோலு உயிரிழந்துள்ளார் என அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக குடும்பத்தினர் கடந்த 7ஆம் திகதி அளித்த புகாரின் பேரில் அஜித் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, யூடியூப் மூலம் தவறான அறுவைச் சிகிச்சை செய்ததால் சிறுவனின் உயிர் பறிபோன சம்பவம் அப்பகுதியில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here