மெக்சிக்கோ செனெட்டில் நீதித்துறை சீர்திருத்தம் குறித்து விவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் உள்ளே நுழைந்ததால் செனெட் உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக சபையின் அமர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டன.

நீதித்துறை சீர்திருத்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆளும் கட்சியான மொரேனாவிற்கு தேவையான வாக்குகள் கிடைத்திருந்த நிலையிலேயே ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தனர்.

எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளும்கட்சிக்கு ஆதரவை வெளியிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்சிக்கோவின் பதவி விலகும் ஜனாதிபதியின் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு மாணவர்களும், நீதித்துறை ஊழியர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறையை அறிமுகப்படுத்தவுள்ள இந்த சீர்திருத்த திட்டத்தினால் நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என ஆய்வாளர்களும்  விமர்சகர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் பகுதிக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களை செவிமடுக்கின்றார்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.

மெக்சிக்கோ கொடியையும் நீதித்துறை சீர்திருத்த முயற்சிகளிற்கு எதிரான வாசகங்களையும் ஏந்திய  ஆர்ப்பாட்டக்காரர்கள் நீதித்துறை வீழ்ச்சியடையாது என கோஷமிட்டுள்ளனர்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களுடன் இணைந்துகொண்டுள்ளனர்.

நீதித்துறை சீர்திருத்தம் எவ்வளவு ஆபத்தானது என்பது தங்களிற்கு தெரியும் என 30 வயது நீதித்துறை பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here