நீண்ட வார விடுமுறை மற்றும் தேர்தல் காரணமாக, அரச மற்றும் தனியார் பேருந்துகளில் 99 வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் பேருந்து நிறுவனங்கள் பல பேருந்துகளிலும், இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிக்கும் விரைவுப் பேருந்துகளிலும் ஆசனங்கள் முன்பதிவு செய்யப்படுவதாகக் கூறுகின்றன.

நாளை 13 மற்றும் 20 ஆம் திகதிகளில் கொழும்பில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் அனைத்து ஆசனங்களும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், 22 மற்றும் 23 ஆம் திகதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து கொழும்பு வரும் பேருந்துகளில் தொண்ணூறு வீதமான ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

அத்துடன் இலங்கை போக்குவரத்து சபையின் பயணிக்கக்கூடிய பேருந்துகளில் மேற்படி நான்கு நாட்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை முதல் 23ஆம் திகதி வரை சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசனங்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், 20, 22, 23 ஆகிய மூன்று நாட்களுக்கு அரச பேருந்துகளை வாடகைக்கு வழங்க வேண்டாம் என இலங்கை போக்குவரத்துச் சபைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்புரை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here