Sunday, April 26, 2026
No menu items!

இலங்கை போக்குவரத்துச் சபை

மற்றுமொரு பேருந்து விபத்து!

புத்தல - மொனராகலை பிரதான வீதியில், 11 ஆம் மைல்கல் பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று ( 10) மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் காயமடைந்த நிலையில், புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் மேலதிக சிகிச்சைக்காக மொனராகலை மாவட்டப்...

இலங்கை போக்குவரத்து சபை தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு; பயணிகள் சிரமத்தில்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் தொழிற்சங்கங்கள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒன்றிணைந்த நேர அட்டவணைகளை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கான ஒன்றிணைந்த நேர அட்டவணை முறைமையை செயற்படுத்துவதற்கான முன்னோடி திட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டது. இந்தநிலையிலேயே, அந்த...

200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்ய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. தற்போது பயன்பாட்டிலுள்ள பொதுப் பேரூந்துகளின் 52% மற்றும் அதிசொகுசு பேரூந்துகளின் 94% பொருளாதார ஆயுட்காலத்தைக் கடந்துள்ளன. எனவே, புதிய பேரூந்துகளை அறிமுகப்படுத்தும் அவசியம் மிக முக்கியமாகத் தோன்றியுள்ளது. அதிவேக நெடுஞ்சாலை பயணிகளின் அதிகரித்த கோரிக்கையை பூர்த்தி...

கொத்மலை விபத்தில் சிக்கியவர்களில் 44பேர் தொடர்ந்து சிகிச்சையில்..!

கொத்மலை - கெரண்டி எல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் காயமடைந்த 44 பேரும் தொடர்ந்தும் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்தனர். கொத்மலை பிரதேச வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை, பேராதனை, கம்பளை மற்றும் நாவலப்பிட்டி ஆகிய வைத்தியசாலைகளில்...

கொத்மலையில் பேருந்து விபத்து – 11 பேர் உயிரிழப்பு..!

நுவரெலியா - கண்டி பிரதான வீதியின், கொத்மலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இறம்பொடை - கெரண்டி எல்ல பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கதிர்காமத்திலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகத்...

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் எதிர்கால நடவடிக்கைகளை வெற்றிகரமாக முன்னெடுப்பது மற்றும் மக்களுக்குத் தரமான பயணிகள் போக்குவரத்துச் சேவையை வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குமார குணசேன தலைமையில் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதான அலுவலகத்தில் நேற்று (24/03/2025) கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் பிராந்திய அலுவலக மேலாளர்கள், செயற்பாட்டு...

மது போதையில் பேருந்து செலுத்திய சாரதி மடக்கி பிடிப்பு..!

மது போதையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸை செலுத்திச் சென்ற சாரதி ஒருவர் வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பொலிஸ் போக்குவரத்து பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். தணமல்வில பகுதியிலிருந்து பதுளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, குறித்த...

தனியார் மற்றும் அரச போக்குவரத்து பிரிவினர் புதிய முறைக்கு இணக்கம்..!

01.02.2025 இலிருந்து யாழ்ப்பாண நகரில் அமைக்கப்பட்ட நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபையும் தனியாரும் இணைந்து நெடுந்தூர சேவைகளை ஆரம்பிப்பதற்கு இரு தரப்பினரும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயன் அவர்கள் தலைமையிலான கலந்துரையாடலில் இணக்கம் வெளியிட்டனர். இதனையடுத்து எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதியிலிருந்து இணைந்த நேர அட்டவணையின் கீழ் நெடுந்தூர பேருந்து நிலையத்திலிருந்து சேவைகள்...

பாடசாலை மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு..!

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடான கலந்துரையாடலானது அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (16.01.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் பாடசாலை மாணவர்களின் போக்குவரத்துச் சேவைகளில் ஏற்படும் தடங்கல்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு பின்வரும் தீர்மானங்கள்...

கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் விபத்து; பலர் காயமடைந்துள்ளனர்!

கொழும்பு நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். பஸ் விபத்தின்போது பஸ்ஸில் 15 பேர் பயணித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மடகல்ல - மஹவ வீதியில் கொன்வெவ பிரதேசத்தில் இன்று (08) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பஸ் வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில்...
- Advertisement -spot_img

Latest News

சோமாலியக் கடற்பகுதியில் கப்பல் கடத்தல்;பணியாளர்களில் இலங்கையரும் ஒருவர்

சோமாலியக் கடற்பகுதியில், 18,500 பெரல் எண்ணெய் மற்றும் 17 பணியாளர்களுடன் சென்ற ஒரு எண்ணெய் கப்பலைக் கடற்கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இது, சோமாலியக் கடற்கொள்ளை மீண்டும் தலைதூக்குவதன் ஒரு...
- Advertisement -spot_img