சுவிஸ் நாட்டின் அடுக்குமாடி குடியிருப்பில் இலங்கையர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சடலமானது இன்று (19) காலை சுவிஸ் – கிளாட் ப்ரூக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கோபிநாத் என்ற 34 வயதுடைய இலங்கையர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடியிருப்பு Airbnb நிறுவனத்தால் வாடகைக்கு விடப்பட்டது எனவும், அவசர சேவை மையத்திற்கு கிடைத்த அழைப்பின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சடலத்தை மீட்டதுடன், சம்பவ இடத்திலேயே இருவரையும் கைது செய்துள்ளனர் எனவும் தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
சுவிஸ் நாட்டை சேர்ந்த 40 மற்றும் 54 வயதான சந்தேகநபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், மூவருக்கு இடையிலான உறவு மற்றும் எதனால் கொல்லப்பட்டார் என்பது தொடர்பில் இன்னும் தெரியவராத நிலையில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.








