Monday, September 28, 2026
No menu items!

இலங்கையர்

இஸ்ரேலில் கட்டுமானத் தொழிலாளியாக பணிபுரிந்த இலங்கையர் கொலை — அதிகாரிகள் விசாரணை தீவிரம்!

இஸ்ரேலில் கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்த ஒரு இலங்கையர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுக்கான இலங்கை தூதுவர் நிமால் பண்டார தெரிவித்துள்ளார். காலியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளார். ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒருவரால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டதாகவும், குறித்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்தான் இஸ்ரேலுக்கு சென்றிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் இஸ்ரேல்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் இலங்கையர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 21 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் வகை போதைப்பொருளை வைத்திருந்த இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (NCU) தெரிவித்ததாவது, 28 வயதுடைய சந்தேக நபர் தாய்லாந்திலிருந்து இந்தியாவின் சென்னை வழியாக இலங்கைக்கு வந்தபோது, சுமார் 2.7 கிலோகிராம் குஷ் போதைப்பொருளை...

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமை – விரைவில் நடவடிக்கை!

வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் (SLBFE) 40வது ஆண்டு விழாவில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர், தேவையான சட்ட கட்டமைப்பு மற்றும் வசதிகளை உடனடியாக நிறுவ பொது நிர்வாக அமைச்சகம் ஒரு சிறப்பு குழுவை நியமித்துள்ளதாக...

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்க திட்டம்!

வெளிநாடுகளில் அனர்த்தங்களை எதிர்கொள்ளும் இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டமொன்றை செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டில் பல்வேறு அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் இலங்கையர்களுடைய பிள்ளைகளின் கல்வியைப் பாதுகாப்பதற்காக குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. "கல்வியில் யாரையும் கைவிடக் கூடாது" என்ற எண்ணக் கருவுக்கமைய ஜனாதிபதி நிதியம்,வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி – மருத்துவ சங்கத்தின் கடும் எதிர்ப்பு!

வெளிநாட்டவர்களுக்கு இலங்கையில் கஞ்சா பயிரிட அனுமதி வழங்கும் அரசாங்கத் தீர்மானத்தை இலங்கை மருத்துவ சங்கம் கடுமையாக எதிர்த்துள்ளது. இலங்கை மருத்துவ சங்கம் வெளியிட்ட அறிக்கையில், இத்தகைய அனுமதி கடுமையான சுகாதார, சமூக மற்றும் பொருளாதார அபாயங்களை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பயன்பாட்டிற்காக கஞ்சாவை பயிரிடுவதை நியாயப்படுத்துவது தவறானது என்றும் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், 2021 ஆம் ஆண்டிலிருந்து...

தென்கிழக்கு ஆசியாவில் ஆட்கடத்தல்: இலக்கு வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!

இலங்கையர்களை இலக்குவைத்து, குறிப்பாகத் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஆட்கடத்தல் மையங்களுடன் தொடர்புடைய, ஆட்கடத்தல் நடவடிக்கைகள் குறித்து தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வலையமைப்புகள், 50,000க்கும் மேற்பட்ட நபர்களை மோசடி நடவடிக்கைக்குள் உள்ளீர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகப் புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆட்கடத்தல் நடவடிக்கைகளில் இலங்கையர்களே முதன்மையாக இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி வேலை வாய்ப்புகள்...

மாலைத்தீவின் உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

மாலைத்தீவுக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாட்டுக்கு திரும்பினார். மாலைத்தீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி கடந்த 28ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்டு, மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மாலைத்தீவு தலைவர் உட்பட...

இராணுவத்தின் 542 ஆவது படைப்பிரிவு ஏற்பாட்டில் மன்னார் மடுவில் வில் தேசிய  மரம் நடும்  நிகழ்வு முன்னெடுப்பு!

தாய் நாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த அனைத்து இலங்கையர்களையும் நினைவுகூரும் வகையில், இராணுவத்தின் 542 வது காலாட்  படை பிரிவு ஏற்பாடு செய்த தேசிய மர நடுகை நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (14)  மன்னார் மடு திருத்தல வளாகத்தில் இடம் பெற்றது. குறித்த  நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட  ஆயர் மேதகு   டாக்டர். ஏ. ஞானப்பிரகாசம் ஆண்டகை, ...

தென் கொரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் விசேட அறிவிப்பு!

தென்கொரியாவின் சியோல் நகரில் அமைதியின்மை ஏற்படக்கூடிய சாத்தியம் நிலவுவதன் காரணமாக எதிர்வரும் வெள்ளி (4) மற்றும் சனிக்கிழமைகளில் (5) அங்குள்ள தூதரகம் திறக்கப்பட மாட்டாது என தென் கொரியாவிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது. இதன்படி, அவசர தேவைகள் தவிர்ந்து ஏனைய சந்தர்ப்பங்களில் சியோல் நகருக்குள் பிரவேசிப்பதனை தவிர்க்குமாறு அந்த நாட்டிலுள்ள அனைத்து இலங்கையர்களுக்கும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. ஏதேனும்...

நான்கு இலங்கையர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் விதித்த தடை குறித்து இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?

நான்கு இலங்கையர்களுக்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கம் அண்மையில் விதித்த தடைகள் குறித்து அரசாங்கம் இன்று மாலை தனது நிலைப்பாட்டை அறிவிக்கும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பலர் ஒரு தீவிரமான விஷயமாகக் கருதும் இந்த விஷயத்தைத் தீர்ப்பதில் ஏற்படும் தாமதம் குறித்த கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்தார். இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது கடுமையான...
- Advertisement -spot_img

Latest News

மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக ஈரான் அமெரிக்காவுக்கு வழங்கிய சமாதான ஒப்பந்தத்தை...
- Advertisement -spot_img