தாய்வானின் கடற்பிராந்தியத்திற்குள் இவ்வருடத்தின் முதல் ஆறு மாத காலத்தில் 835 சீனப் படகுகள் பிரவேசித்துள்ளதாகவும் அப்படகுகள் யாவும் உடனுக்குடன் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் தாய்வானின் கரையோர காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.
எமது கடற்பிராந்திய இறையாண்மையை மீறும் செயலுக்கு இடமளிக்க முடியாதெனக் குறிப்பிட்டுள்ள தாய்வான் பாதுகாப்பு அமைச்சர் வில்லிங்க்டன் வூ, எமக்கு சொந்தமான கின்மென் தீவு கடற்பரப்பில் புதிய ஒழுங்குகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் இவை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை தாய்வான் கட்டுப்பாட்டிலுள்ள கடற்பரப்பில் இருந்து 19.5 கடல் மைல்கள் தூரத்தில் சீனக் கடற்பரப்பில் காணப்பட்ட தாய்வானின் மீன்பிடிக் கப்பல் கைப்பற்றப்பட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் அண்மையில் பதற்றம் ஏற்பட்டது.
கின்மென் தீவானது, சீனாவில் இருந்து மூன்று மைல் தொலைவிலும் தாய்வானில் இருந்து 124 மைல்கள் தூரத்திலும் காணப்படுகிறது.








