அக்குரஸ்ஸ – தெனியாய வீதியில் ஹுலங்தாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (18.09.2024) இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியில் பயணித்த மற்றுமொரு பஸ்ஸை கடந்து முன்னோக்கி செல்ல முயன்ற போது எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸின் சாரதியின் கவனக்குறைவே இந்த விபத்துக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தின் போது, மோட்டார் சைக்கிளின் சாரதி படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here