இந்தியா – ராஜஸ்தான் மாநிலத்தில், நேற்று முன்தினம்(18) ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த குழந்தையொன்று 18 மணி நேரத்திற்கு பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

நீரு குர்ஜர் என்ற இரண்டரை வயது பெண் குழந்தையொன்றே மூடப்படாத ஆழ்துளைக் கிணற்றிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்து  சுமார் 35 அடி ஆழத்தில் குழந்தை சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து மீட்புக்குழுவினரால் மீட்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், 18 மணி நேரப் போராட்டத்துக்குப் பின் குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.

குழந்தையின் உடல்நிலை மோசமாகி உள்ளதால்  சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள்  செய்தி வெளியிட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here