மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகளை கொண்டு செல்லும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை (20) யாவும் பூர்த்தியடைந்துள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களில் பொலிசார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்

நாளை நடைபெறவுள்ள 9 வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெறவுள்ளது இதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 இலச்சத்து 44 ஆயிரம் வாக்களார்கள் வக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் 442 வாக்களிப்பு நிலையற்கள் அமைக்பப்பட்டுள்ளது

இலங்கையில் ஆகக் குறைந்த வாக்களார்களை கொண்ட மாந்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்றுவந்த வாக்களிப்பு நிலையம் இம்முறை புதூர் விக்கினேஸ்வரா வித்தியாலய மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் தேர்தல் கடமையில் 6750 அரச எத்தியோகத்தர்களும் 1514 பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் தேர்தல் கடமையில் ஈடுபட்டுவருவதாகவும் இதுவரை 61 வன்முறைசம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட அதிபரும் தெரிவத்தாட்சி அதிகாரியுமான திருமதி ஜே.ஜே. முரளீதரன் தெரிவித்துள்ளர்.

இந்த நிலையில்  மாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தயஸ்தானமாக இயங்கிவரும் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்கு பெட்டிகளை அந்த அந்த வாக்களிப்பு நிலையங்களின் உத்தியோகத்தர்கள் வாக்கு பெட்டிகளை பெறுப்பெடுத்துக் கொண்ட இவர்கள் வாக்கு பெட்டிகளுடன் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் சென்றனர்.

இதேவேளை மாவட்டத்தில் பிரதான சந்திகள் வீதிகளில் பொலிசார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் வாகன நோந்து நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here