எவர் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டாலும் அவருக்கு ஆதரவளிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனுவையில் வாக்களித்த பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களிற்காக அரசாங்கம் 40 பில்லியனை செலவிடவேண்டும் என்பதால் புதிய ஜனாதிபதி பல சவால்களை எதிர்கொள்வார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தலிற்கான செலவு மாத்திரம் பத்து பில்லியன் என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மாகாணசபைகள் உள்ளுராட்சி தேர்தல்களிற்காக மேலும் பத்து பில்லியனை செலவிடவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த செலவுகளுடன் புதிய ஜனாதிபதி பொருளாதாரத்தை கையாள்வது பொதுமக்களிற்கு சேவைகளை வழங்குவது போன்றவற்றில் பெரும் சவால்களை எதிர்கொள்வார் என மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நான் அரசியலில் இருந்து ஒய்வுபெறவில்லை ஆனால் தேர்தல்களில் போட்டியிடுவதில்லை என தீர்மானித்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here