பெங்கிரிவத்தையில் உள்ள முன்னணி பெண் சட்டத்தரணி ஒருவர்  அவரது வீட்டில் வைத்து வீட்டின் சாரதியால் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

35 வயதுடைய ஜெயனி செவ்மினி டி சில்வா என இவ்வாறு உயிரிழந்துள்ளதாக  அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மாத்தறையைச் சேர்ந்த சந்தேக நபர், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தை  அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை கைது செய்ய மிரிஹான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், பெந்தர ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சந்தேக நபரை பெந்தர பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

45 வயதான சந்தேக நபர் மிரிஹான பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

இந்த சம்பவத்தின் பின்னணியை கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here