கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு குறித்து பரீட்சைத் திணைக்களம் தகவல் வெளியாக்கியுள்ளது.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் வௌியிடவுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெறுபேறுகளுக்கான ஆவணங்களைத் தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.








