
சுமார் 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்டவிரோதமாகக் கொண்டுவந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் பயணப்பையில் மறைத்து, கொண்டுவரப்பட்ட 36,800 சிகரெட்டுக்களை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.







