பாதாள உலக கும்பலை சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான”படோவிட்ட அசங்க”வின் உதவியாளர்கள் இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதவல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய நபரும், 67 வயதுடைய பெண்ணுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து  06 கிராம் 950 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்,  01 கிராம் 190 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 40  போதை மாத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here