கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெக்னிகல் சந்தி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 32 வயதுடைய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த  சம்பவம் இன்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவருக்கும் மற்றுமொருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here