இலங்கை தமிழரசுக் கட்சியினர் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று (10.10) கையளித்தனர்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை முதன்மை வேட்பாளராக குறிப்பிட்டு இலங்கை தமிழரசுக் கட்சியினர் வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

இன்று 9.40 மணியளவில் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

அதன் பின்னர் தந்தைசெல்வா நினைவுசதுர்க்கத்தில் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்தில் களமிறங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here