மஹியங்கனை திபுலபலஸ்ஸ பிரதேசத்தில் தனியார் காணியொன்றில் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட பேக்கோ இயந்திரத்துடன் 4 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் ரொட்டலவெல, திவுல்பலஸ்ஸ மற்றும் கிராதுருகோட்டை பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் மூன்று சந்தேகநபர்கள் இந்த சுற்றிவளைப்பின் போது தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here