அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர் இந்திரஜா ஷங்கர். கடந்த சில மாதங்களுக்கு முன் அவருடைய சொந்த மாமன் கார்த்திக் என்பவருடன் இவருக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது.
இதன்பின் இருவரும் ஜோடியாக மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கினர். அப்போது மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இந்திரஜா அவர் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்திருத்து போட்டியில் இருந்து இடை விலகினார்கள்.
இந்நிலையில், இந்திரஜா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஐந்தாம் மாதம் வளைகாப்பு புகைப்படங்களை பதிவிட்டு. “புளிப்பு சுவை பிடித்து, குழந்தையின் இதயத்துடிப்பை அறிந்து ரசித்த நாள்..5 ஆம் மாதம் பூச்சூடல் விழா என பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் தற்போது பெரிதும் பகிரப்பட்டு வருகின்றது.


















