அம்பாறை – சம்மாந்துறை பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த வீட்டின் கட்டட வேலைக்காகக் கொட்டப்பட்ட மண்ணிலிருந்து அந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலின் பின்னர், அந்த கைக்குண்டை செயலிழக்கச் செய்வதற்கான பணிகளில் விசேட அதிரடிப்படையினர் செயற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here