இலங்கையில் இஸ்ரேல் பிரஜைகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இதுவரை மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள், உள்ளூர் மற்றும் வெளிநாட்டினர், இஸ்ரேலியர்கள் அல்லது வேறு எவருக்கும் எதிரான தாக்குதல்கள் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை, ஏனெனில் அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.








