பசறை – கிக்கிரிவத்தை கல்குடாவத்தை பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள மண்மேடு ஒன்றிலிருந்து வீழ்ந்து அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.







