பிக்பாஸ் அருணுக்கு வந்த வாய்ப்பை தான் அர்ச்சனாவிற்காக விட்டுக் கொடுத்ததாக சமூக வலைத்தளங்களில் ஒரு பேச்சு வைரலாகி வருகின்றது.

பிரபல தொலைக்காட்சியில் ரசிகர்களின் மனதை வென்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் ஒன்று தான் பிக்பாஸ்.

இந்த நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. கடந்த சீசன்களை இதுவரையில் நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.

திடீரென நிறைய படங்களில் கமல் கமிட்டாகி இருப்பதால் ஷோவில் இருந்து திடீரென விலகவதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த செய்தியை பிக்பாஸ் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆண்டவராக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 8-ன் 3 ஆவது வாரம் சென்றுக் கொண்டிருக்கின்றது. இதற்கான போட்டிகளும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றன.

அர்ச்சனா உடைத்த ரகசியம்

இந்த நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ரவீந்தர் பேட்டியொன்றில் ஒரு சில உண்மைகளை கூறியுள்ளார்.

அதில், “ நான் வெளியே சென்ற பின்னர்

பிக்பாஸ் அர்ச்சனா மட்டும் தான் கோல் செய்து விசாரித்தார். அத்துடன் அருண் ஏன் இப்படி விளையாடுகிறான் என்று தெரியவில்லை. கடந்த சீசனில் அவனுக்கு தான் வாய்ப்பு வந்தது. அதனை எனக்கு கொடுத்து அறிவுரை வழங்கி அனுப்பினான். ஆனால் தற்போது அவன் ஏன் அப்பாவியாக நடிக்கிறான் என்று எனக்கும் தெரியாது.

பிக்பாஸ் வீட்டில் புகைப்பிடிப்பதற்கு என்று தனியாக அறையுள்ளது. அந்த அறையில் என்ன பேசினாலும் வெளியில் காட்டமாட்டார்கள்.

அதே சமயம், பிக்பாஸ் வீட்டிலுள்ளவர்களை எப்படி கவுக்கலாம் என்பதனை அந்த அறையில் தான் பேசிக் கொள்வார்கள். முத்துகுமரன் நன்றாக விளையாடுகின்றான்..” என அர்ச்சனா கூறியதையும் இவரது தனிப்பட்ட கருத்தையும் கூறினார்.

இந்த செய்தி தற்போது வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here