இந்த வருடத்தின் மூன்றாம் காலாண்டுக்கான மின் கட்டணத் திருத்தம் தொடர்பான யோசனையை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.

ஒவ்வொரு காலாண்டுக்கும் மின் கட்டணம் திருத்தப்படுகிறது. இதன்படி, டிசம்பர் மாதத்தில் மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவை மின்சார சபை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளது.

டிசம்பரில் அனைத்துத் துறைகளுக்கும் மின்சாரக் கட்டணம் 06 வீதம் குறைக்கப்படலாம் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார கட்டணத்தை 4 முதல் 11 சதவீதம் வரை குறைப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கான முன்மொழிவுகள் தற்போது ஆராயப்பட்டு வருவதாகவும் மேலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் எதிர்வரும் திங்கட்கிழமை மின்சார சபைக்கு முன்மொழிவுகள் அனுப்பி வைக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து முன்மொழிவுகளும் பொது கலந்தாய்வுக்குப் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டண திருத்தங்கள் மார்ச் மாதம் 04 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன. இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 21.9 சதவீதம் மின் கட்டணம் திருத்தப்பட்டது.

இரண்டாவது காலாண்டின் மின் திருத்தம் ஜூலை மாதம் 16 அன்று மேற்கொள்ளப்பட்டது, இதன்போது அனைத்து பிரிவுகளுக்கும் 22.5% மின் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here