2024 பொதுத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளில் சுமார் 70% விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் நாளை மறுதினம் அதாவது நவம்பர் மாதம் 7ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படும் என சிரேஷ்ட பிரதி தபால் மா அதிபர் ரஜித் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், அதற்குள் உங்களின் உத்தியோகபூர்வ வாக்குச் சாவடி அட்டைகள் வரவில்லை என்றால், உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பிறகு, அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து அதைப் பெற்றுக்கொள்ளலாம்.








