முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை தொடர்பில் அமைச்சரவை எடுக்கும் தீர்மானத்தின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை குறைப்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகளை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்ட அச்சுறுத்தல் மதிப்பீட்டு அறிக்கை, பொது பாதுகாப்பு அமைச்சினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.








