கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் நாணய பரிமாற்ற கருமபீடங்களை இயக்குவதற்கு 5 நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்தில் 5 நாணய மாற்று கருமபீடங்களை இயக்குவதற்கு உரிமம் பெற்ற வணிக வங்கிகள், உரிமம் பெற்ற விசேட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி வணிகத்தில் ஈடுபட்டுள்ள முகவர்களிடமிருந்து விலைமனு கோரப்பட்டிருந்தது.

அதற்காக, 5 நிறுவனங்கள் தங்களது முன்மொழிவுகளை சமர்ப்பித்திருந்தன.

அதன்படி, தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், தெரிவுசெய்யப்பட்ட 5 நிறுவனங்களுக்கு மூன்று வருடங்களுக்கு நாணய மாற்று கருமபீடங்களை இயக்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here