இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை நிறுத்துவதாக உறுதியளித்தமையானது தொழிற்துறையினர் மத்தியில் பாரிய அதிர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக, நேற்றையதினமே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.
இந்தநிலையில், உலகின் மிகப்பெரிய கடல் காற்று மேம்படுத்தல் நிறுவனமான ஓர்ஸ்டெட் (Orsted) நிறுவனம் 14 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டெனால்ட் ட்ரம்பின் வெற்றியின் பின்னர் அவரது குடும்ப புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த புகைப்படத்தில் உலக செல்வந்தரான எலோன் மஸ்கும் அடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.








