2000 ரூபா பெறுமதியான கொக்கெய்ன் போதைப்பொருளுடன் சியரா லியோன் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அந்த நபரை கைது செய்தனர்.
ஸ்கேன் பரிசோதனைக்குப் பிறகு, அந்த நபர் 17 கொக்கைன் மாத்திரைகளை விழுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
32 வயதுடைய சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடத்தப்பட்ட கொக்கேய்ன் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட கொக்கெய்ன் மாத்திரைகளை சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.








