2024 பொதுத் தேர்தலில் இன்றையதினம் 60% முதல் 65% வரையான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாரிய அளவிலான எந்தவித முறைகேடும் இதுவரை பதிவாகவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டு இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
வாக்குப் பதிவுகள் இன்று காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இடம்பெற்றன.
• யாழ்ப்பாணம் -60%
• நுவரெலியா- 68%
• வன்னி தேர்தல் – 65%
• மொனராகலை- 63%
• மாத்தறை – 64%
• மாத்தளை – 67%
• பதுளை- 67%
• கேகாலை – 64%
• கொழும்பு – 65%,
• இரத்தினபுரி- 63%
• குருநாகல் – 64%
• புத்தளம்- 56%
• பொலன்னறுவை- 65%
• கண்டி – 62%
• களுத்துறை – 64%
• கம்பஹா – 65%
• ஹம்பாந்தோட்டை – 60%
• திகாமடுல்லை தேர்தல் – 62%
• காலி – 64%
• அனுராதபுரம் – 65%
• மட்டக்களப்பு – 61%
• திருகோணமலை – 67% வாக்குகளும் பதிவாகியுள்ளன.








